சிலம்பம்..
மக்கள் தம்மை சிங்கம், புலி போன்ற விலங்குகளிடம் இருந்து காத்துக்கொள்ளக் கையாண்ட முறையே சிலம்பம் எனப்படும் கலையாக வளர்ந்துள்ளது என்பர். தமது கைகளில் எப்போதும் இருக்கக் கூடிய சிறிய ஆயுதங்களான கம்பு (தடி), சிறு கத்தி, கோடரி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி விலங்குகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ள இந்தக் கலையைப் பயன்படுத்தினர்.
சர்வதேச போட்டி...
மலேஷியா நாட்டில், நான்காவது சர்வதேச சிலம்பம் விளையாட்டு போட்டிகள் நடந்தன....அதில், இந்தியா, மலேஷியா, சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேஷியா உட்பட, 14 நாடுகளை சேர்ந்த, ...
500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து, 19 மாணவ - மாணவியர் பங்கேற்ற...
அவர்கள், 19, தங்கம், 18 வெள்ளி மற்றும், 17 வெண்கல பதக்கங்கள் பெற்று, ஒட்டு மொத்தத்தில் இரண்டாம் இடம்.
நேற்று காலை சென்னை திரும்பினர். விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது....
இட ஒதுக்கீட்டு....
விளையாட்டுப் பிரிவுக்கு, 3 சதவீத இட ஒதுக்கீட்டை, தமிழக அரசு தற்போது அளிக்கிறது. இதை, 5 சதவீதமாக உயர்த்த வேண்டும்.
சிலம்பம் வெளிநாட்டில் இருந்து வந்த விளையாட்டு அல்ல. நம் இந்திய விளையாட்டு. அதிலும், தமிழக கிராம பகுதிகளில் உள்ள பாரம்பரிய விளையாட்டு. அதை மேலும் ஊக்குவிக்க, அரசு பள்ளிகளில் சிலம்பம் விளையாட்டை கட்டாயமாக்க வேண்டும்...