திருநெல்வேலி சொதி குழம்பு...தமிழ் மற்றும் ஆங்கிலம்...

சொதி குழம்பு...

திருநெல்வேலி சொதி குழம்பு இட்லி, தோசை, ஆப்பம், சூடான சாதம் என்று எல்லாவற்றுக்குமே சூப்பரான காம்பினேஷன் ஆக இருக்கக் கூடிய இந்த சொதி குழம்பு முற்றிலும் தேங்காய் பால் கொண்டு செய்யப்படுகிறது. தேங்காய் பால் மற்றும் காய்கறி சேர்த்து செய்யும் இந்த ஆரோக்கியமான சொதி குழம்பு சுவையாக நம் வீட்டிலும் எப்படி தயாரிக்கலாம்? 

Sodhi Kuzhambu...

   

A Tirunelveli Kuzhambu recipe called Sodhi Kuzhambu that is prepared in a coconut milk gravy and cooked along with an assortment of seasonal vegetables. Serve it along with any South Indian breakfast item as a side dish...

தேவையான பொருட்கள்:
    1.முழு தேங்காயை – 1
     2.மிளகாய் – 5, 
     3.இஞ்சி துண்டு – ஒரு விரல் நீளம், 
      4.சமையல் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், 
       5.கடுகு – கால் டீஸ்பூன்,   
       6.உளுந்து – கால் டீஸ்பூன், 
       7.சீரகம் – கால் டீஸ்பூன், 
       8.வர மிளகாய் – 2,                  9.கறிவேப்பிலை – ஒரு இணுக்கு, 
       10.பூண்டு பல் – 2, 
       11.சின்ன வெங்காயம் – 10, 
       12.மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன், 
      நீளவாக்கில் நறுக்கிய கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, 
கேரட், பீன்ஸ் – தலா ஒரு கப், 
     13.வேக வைத்த பாசிப்பருப்பு – அரை கப், உப்பு – தேவையான அளவு, 
     14நறுக்கிய மல்லித்தழை – சிறிதளவு.

Ingredients

  • 1/4 cup Yellow Moong Dal (Split) , washed and kept aside
  • Potato (Aloo) , cut into small pieces
  • Green beans (French Beans) , cut into small pieces
  • Carrot (Gajjar) , cut into small pieces
  • 1/4 cup Green peas (Matar)
  • 1/2 cup Cauliflower (gobi) , florets
  • Drumstick , cut into 1 inch pieces, cut lengthwise
  • Pearl onions (Sambar Onions) , cut into half
  • Tomato , cut into quarters
  • 1/4 teaspoon Mustard seeds (Rai/ Kadugu)
  • 1 teaspoon Cumin seeds (Jeera)
  • 1 tablespoon Oil
  • 1/4 teaspoon Asafoetida (hing)
  • 1 tablespoon Lemon juice
  • 1 cup Fresh coconut , grated
  • 1 inch Ginger
  • 7 cloves Garlic
  • Green Chillies , slit
  • 1 sprig Curry leaves
  • Coriander (Dhania) Leaves , for garnish
  • Salt , as per taste
திருநெல்வேலி சொதி குழம்பு செய்முறை...
     சொதி குழம்பு செய்வதற்கு முதலில் ஒரு முழு தேங்காயை துருவி எடுத்து அதை மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து கெட்டியான முதல் தேங்காய் பால் எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதன் சக்கையை மிக்ஸி ஜாரில் போட்டு மீண்டும் கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைத்து இரண்டாவது தேங்காய்ப் பாலை எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் மீண்டும் மீதமிருக்கும் சக்கையை போட்டு கடைசியாக தண்ணீர் ஊற்றி அரைத்து நன்கு பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள். மூன்று அளவுகளில் தேங்காய் பாலை நாம் இப்போது எடுத்து வைத்திருக்கிறோம்.
     சின்ன வெங்காயம் மற்றும் மற்ற காய்கறிகளை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் 2 டேபிள்ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்ததும் உளுந்து மற்றும் சீரகம் சேர்த்து தாளித்து கொள்ளுங்கள். இவை பொன்னிறமாக வறுபட்டதும் ஒரு இணுக்கு கறிவேப்பிலை மற்றும் 2 வர மிளகாய்களை கிள்ளி சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள்
    
தோல் உரித்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தை ஒன்றிரண்டாக நறுக்கி சேர்த்து கொள்ளுங்கள். கொஞ்சம் போல் மஞ்சள் தூள் விருப்பமிருந்தால் சேர்த்துக் கொள்ளுங்கள். சிலர் வெள்ளையாக சொதி செய்வது உண்டு. இதனுடன் இரண்டு பூண்டு பற்களை பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்து லேசாக வதக்கிக் கொள்ளுங்கள். அதற்குள் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி துண்டுகளை சேர்த்து நன்கு கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை வாணலியில் சேர்த்து நன்கு பச்சை வாசம் போக வதக்கி விடுங்கள். அதன் பிறகு நீங்கள் நீளவாக்கில் பொடியாக நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். 2 நிமிடம் இவற்றை வதக்கிய பின்பு மூன்றாவதாக எடுத்த தேங்காய் பாலை சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்
     பத்து நிமிடம் தேங்காய் பாலுடன் சேர்த்து காய்கறிகள் அனைத்தும் கொதித்து வந்த பிறகு இரண்டாவதாக எடுத்து வைத்த தேங்காய் பாலை சேர்த்து அதனுடன் வேக வைத்துள்ள பாசிப்பருப்பு கால் கப் அளவிற்கு சேர்க்க வேண்டும். அப்போது தான் சொதி கெட்டியாக வரும். பாசிபருப்பு இல்லை என்றால் பொட்டுகடலை 2 டேபிள் ஸ்பூன் கெட்டியாக அரைத்து சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இவை கொதித்ததும் முதலில் எடுத்த பாலை சேர்த்து அடுப்பை குறைந்த தீயில் வைத்து கொள்ள வேண்டும். பின்பு இதற்கு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். கடைசியாகத் தான் உப்பு சேர்க்க வேண்டும். இல்லை என்றால் சொதி திரிந்துவிடும். ஒரு கொதி வந்ததும் நறுக்கிய மல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த சுவையான திருநெல்வேலி சொதி இட்லி, தோசை, ஆப்பம், இடியாப்பம் மற்றும் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள சூப்பராக இருக்கும், ட்ரை பண்ணி பாருங்க.
Tirunelveli Sothi Kulambu Recipe...

 Thinly slice onions and other vegetables lengthwise. Then turn on the stove and place a pan in it. Add 2 tbsp of oil and dry well. When the oil dries well, add mustard and fry. Once the mustard is fried, season it by adding gram flour and cumin seeds. When these are fried golden brown add a pinch of curry leaves and 2 pinches of chillies and season it.

 Chop the peeled onion into two pieces and add it. Add a little turmeric powder if desired. There are some people who are white. Add two cloves of garlic finely chopped and saute lightly. Meanwhile wash a mixing jar and take it. Add green chillies and ginger pieces to it and grind it finely.
Meanwhile wash a mixing jar and take it.  Add green chillies and ginger pieces to it and grind it finely.  Add this paste to the pan and fry it until it smells green.  After that add the vegetables that you have chopped lengthwise and saute well.  After frying these for 2 minutes, add the third coconut milk and let it boil well

 After boiling all the vegetables along with the coconut milk for ten minutes, add the second coconut milk and add a quarter cup of boiled dal.  Only then will the mixture thicken.  If you don't have dal, add 2 table spoons of groundnut.  Then when it boils, add the milk taken first and keep the stove on low flame.  Then add salt as needed.  Salt should be added last.  If not, the property will be distorted.  Once it comes to a boil, add chopped coriander leaves and switch off the stove.  Try making this delicious Tirunelveli Sothi, dry and great as a topping for idli, dosa, appam, idiyappam and rice....

பிரபலமான இடுகைகள்