இந்தியாவில் இருந்து அமெரிக்கர்களை மோசடி செய்த கால் கால் சென்டர்....A call center scammed Americans from India.

அமெரிக்கர்களை நூதனமாக ஏமாற்றி பல கோடி மோசடி: 
நூதன முறையில் நூற்றுக்கணக்கான அமெரிக்கர்களை ஏமாற்றி பல கோடி மோசடி செய்த நொய்டா கால் சென்டர் ஊழியர்கள் 84 பேர் கைது செய்யப்பட்டனர்.
 நொய்டா
அமெரிக்க நாட்டு குடிமக்களுக்கு அவர்களின் வருவாய் அடிப்படையில் அரசின் நல உதவிகள் வழங்கப்படுகின்றன. அதற்காக அமெரிக்கர்கள் ஒவ்வொருவருக்கும்  வழங்கப்பட்டுள்ளது.
      டெல்லி அருகே உள்ள நொய்டாவைச் சேர்ந்த ஹர்ஷித் குமார், யோகேஷ் பண்டிட் என்ற இருவர், 'டார்க் வெப்' என்ற நிழல் இணையம் மூலம் லட்சக்கணக்கான அமெரிக்க குடிமக்களின் சமூக பாதுகாப்பு எண்களை பெற்றார்கள்...
 அமெரிக்க அதிகாரிகள் போல பேசி அவர்கள் நொய்டாவில் தொடங்கிய கால் சென்டரின் ஊழியர்கள், சுமார் 4 லட்சம் அமெரிக்கர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டார்கள். அமெரிக்க அதிகாரிகளைப் போல பேசிய அவர்கள், சந்தேகத்துக்கு இடமான நடவடிக்கைகள் காரணமாக அவர்களின் சமூக பாதுகாப்பு எண் உடனடியாக ரத்து செய்யப்பட உள்ளது. அவர்களின் வங்கிக் கணக்கு முடக்கப்படலாம் என்பதால், ஏற்கனவே அவர்களது கணக்கில் உள்ள தொகையை கிரிப்டோ கரன்சியாக மாற்றிக்கொள்ளலாம் என்று கூறி அதற்கான வழிமுறைகளை கூறியுள்ளனர்.
40 லட்சம்...
தினம் ரூ.40 லட்சம் மோசடி அதை நம்பி செயல்பட்ட சுமார் 600 அமெரிக்க குடிமக்களின் பல கோடி ரூபாயை தங்களின் 'சைபர்' மோசடியில் சுருட்டியுள்ளனர். இந்த கால் சென்டரில் 38 பெண்கள் உள்பட 84 பேர் பணிபுரிந்துள்ளனர். மோசடி பற்றி தெரிந்தே, அதிக சம்பளம் காரணமாக உடந்தையாக இருந்துள்ளனர். ஒவ்வொரு நாளும் ரூ.40 லட்சம் வரை மோசடி செய்துவந்துள்ளனர். 
கைது:
     இதுபற்றி அறிந்த நொய்டா போலீசார், கால் சென்டரில் அதிரடி சோதனை நடத்தினர். 84 ஊழியர்கள் கைது அப்போது 150 கணினிகள், ரூ.20 லட்சம் ரொக்கத்தொகை உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. ஊழியர்கள் 84 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட கால் சென்டர் உரிமையாளர்கள் ஹர்ஷித் குமார், யோகேஷ் பண்டிட் ஆகிய இருவரும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்...  
Multi-Crillion Scams to Deceive Americans:

 84 Noida call center employees were arrested for defrauding hundreds of Americans and defrauding them of crores.

 Noida,

 US citizens receive government benefits based on their income.  For that every American is given.

 Two men, Harshit Kumar and Yogesh Pandit, from Noida near Delhi, obtained social security numbers of millions of US citizens through the dark web.

 Speaking as US officials, the call center staff they set up in Noida contacted about 4 lakh Americans over the phone.  Speaking as U.S. officials, they said their Social Security number was immediately revoked due to suspicious activities.  Already, as their bank account may be frozen
They said that they can already convert the amount in their account into crypto currency and gave the instructions for that.

 40 lakhs...
 Rs 40 Lakh Daily Fraud They have swindled crores of rupees from around 600 American citizens who relied on it in their 'cyber' scam.  84 people including 38 women are working in this call center.  Knowing about the fraud, they were complicit because of the high salary.  They have been scamming up to Rs.40 lakh every day.

 Arrest:

 The Noida police came to know about this and conducted a raid at the call center.  84 employees were arrested and documents including 150 computers and Rs.20 lakh cash were seized.  Police also arrested 84 employees.  Harshit Kumar and Yogesh Pandit, the call center owners who masterminded the scam, are absconding.  The police are looking for them...

பிரபலமான இடுகைகள்