நீட் -ராஜஸ்தானில் பரபரப்பு..


ராஜஸ்தானில் நீட் தேர்வு பயிற்சி பெற்ற மாணவர்கள் 2 பேர் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டனர்...


ராஜஸ்தானின் கோட்டா நகரில் நீட் தேர்வு பயிற்சிக்காக தங்கி, படித்த வெளிமாநில மாணவர்கள் 2 பேர் பயிற்சி மையத்தில் தேர்வை எழுதிய பின்னர் நேற்று அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை..
அவிஷ்கர் ஷாம்பாஜி கஸ்லே (வயது 18) மற்றும் ஆதர்ஷ் ராஜ் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். அவிஷ்கர் தேர்வு எழுதிய பின்னர் மாலை 3.15 மணியளவில் நீட் பயிற்சி மையத்தின் 6-வது தளத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்

உயிரிழப்பு;
இதனை அறிந்த அந்த பயிற்சி மையத்தின் ஊழியர்கள் உடனடியாக அவிஷ்கரை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். எனினும், வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார். இந்த காட்சிகள் சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி உள்ளது...
மராட்டியம்:
மராட்டியத்தின் லத்தூர் மாவட்டத்தில் வசித்து வந்த 12-ம் வகுப்பு மாணவரான அவிஷ்கர், 3 ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். அவருடைய பெற்றோர் அரசு பள்ளி ஆசிரியர்களாக உள்ளனர்
பீகார்;
  இதேபோன்று சில மணிநேரம் கழித்து, பீகாரை சேர்ந்த ஆதர்ஷ் ராஜ் என்ற மாணவரும் தனது வாடகை குடியிருப்பில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடன் சகோதரி மற்றும் உறவினர் ஒருவர் வசித்து வந்தனர். தூக்கு போட்டதும் விவரம் அறிந்து உறவினர்கள், அவரை கீழே இறக்கினர். அப்போது உயிருடன் இருந்த அவரை காப்பாற்றி விட சிகிச்சைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும், அந்த முயற்சி பலனின்றி போனது

இந்த 2 மாணவர்களும் தற்கொலை குறிப்பு எதுவும் எழுதி வைக்கவில்லை. 
இதுபற்றி கூடுதல் எஸ்.பி. பகவத் சிங் ஹிங்கர் கூறும்போது, நீட் தேர்வு எழுதிய 2 மாணவர்களும் அதற்கு பின்னர் தற்கொலை செய்துள்ளனர். 

இதுபற்றி விசாரணை செய்து வருகிறோம் என கூறியுள்ளார். அவர்களின் உடல்கள் இன்று பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
கோட்டா:
 நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கோட்டா நகரில் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் மாணவர்கள் பயிற்சிக்காக சேருகின்றனர். எனினும், கடந்த ஆண்டு கோட்டாவில் 15 பயிற்சி மாணவர்கள் தற்கொலை செய்தனர். நடப்பு ஆண்டில் இந்த எண்ணிக்கை 24 ஆக உயர்ந்து உள்ளது. இதனால் கோட்டா நகரில் நீட் தேர்வு பயிற்சி மையங்கள் சில காலம் வரை எந்த தேர்வுகளையும் நடத்த வேண்டாம் என்று அரசு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது...
தோல்வியை கண்டு பயந்து இத்தகைய முடிவை எடுக்கும் மாணவ சமுதாயமே...
நாளைய மாணவர்களை நினைத்து பார்...

2 NEET coaching students commit suicide in Rajasthan

2  students who had stayed and studied for NEET exam practice in Rajasthan's Kota city after writing the exam at the coaching center have caused a sensation by committing suicide yesterday.

 Suicide..

 They have been identified as Avishkar Shambhaji Ghasle (age 18) and Adarsh ​​Raj.  Avishkar committed suicide by jumping off the 6th floor of the NEET coaching center around 3.15 pm after writing the exam.


 

 loss of life;

 Knowing this, the staff of the training center immediately picked up Avishkar and went to the hospital.  However, he died on the way.  These scenes were recorded on CCTV.  Caught on camera...

 Marathi:

 Avishkar, a class 12 student living in Latur district of Maharashtra, has been preparing for NEET for 3 years.  His parents are government school teachers

Bihar:

A few hours later, Adarsh ​​Raj, a student from Bihar, hanged himself in his rented flat.  A sister and a cousin lived with him.  When he was hanged, his relatives got to know the details and took him down.  He was still alive and taken to the hospital for treatment.  However, the effort went in vain.
These 2 students did not write any suicide note.

 Additional S.P.  According to Bhagwat Singh Hingar, the 2 students who appeared in the NEET exam later committed suicide.


 He said that we are investigating this.  Their bodies are undergoing postmortem today.

 Kota:

 Students from different parts of the country join the NEET coaching center in Kota for coaching.  However, 15 trainees committed suicide in Kota last year.  This number has increased to 24 in the current year.  Due to this, the government administration has ordered NEET coaching centers in Kota city not to conduct any exams for some time...


It is the student community that takes such a decision out of fear of failure...

 Think of the students of tomorrow...








பிரபலமான இடுகைகள்