நாவில் எச்சில் ஊறும் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு...

நாவில் எச்சில் ஊறும் 2வகை எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு...

கத்தரிக்காய் பிடிக்காதவர்கள் என்று சொல்பவர்கள் கூட எண்ணெய் கத்தரிக்காயை குழம்பை விட்டு வைக்க மாட்டார்கள். அப்படி வீட்டில் கத்தரிக்காய் இருந்தால் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பை இப்படி செஞ்சு பாருங்க. 

தேவையான பொருட்கள்..
* கத்திரிக்காய் – ½ கிலோ
* நல்லெண்ணெய் – 9 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்

* கடுகு – 1 டீஸ்பூன்

* கடலை பருப்பு – 2 டீஸ்பூன்

* வேர்க்கடலை – 3 டீஸ்பூன் (தோல் நீக்கியது)

* வெள்ளை எள் – 3 டீஸ்பூன்

* தனியா – 5 டீஸ்பூன்

* தேங்காய் துருவல் – ½ மூடி

* காய்ந்த மிளகாய் – 5-6

* சின்ன வெங்காயம் – 150 கிராம்

* தக்காளி – 5

*பூண்டு – 15-20 பல்

* மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன்

* தனியா தூள் – 1 1/2 டீஸ்பூன்

* மிளகாய் தூள் – 1 ½ டீஸ்பூன்

* பெருங்காயம் – 1 டீஸ்பூன்

* புளி – 75 கிராம்

* வெல்லம் – 50 கிராம்

* உப்பு – தேவையான அளவு

* கறிவேப்பிலை – தேவையான அளவு

செய்முறை
1.  முதலில், அடுப்பில் ஒரு வாணலியை வைத்து சூடாக்கவும், அதில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து காய விடவும்.

2. எண்ணெய் வெந்தயம் சேர்த்து வறுபட்டவுடன், கடலைப்பருப்பு, வெள்ளை எள், வேர்க்கடலை மற்றும் தனியா சேர்த்து வறுக்கவும்.

3. நன்கு பொரிந்தவுடன் இதில் 4 டீஸ்பூன் தேங்காய் துருவலை சேர்த்து கலந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.

4. ஆறிய பிறகு சிறிது தண்ணீர் சேர்த்து, ஒரு மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.

5. அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து 4 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு காய விடவும். இதில் நீள வாக்கில் நறுக்கிய கத்திரிக்காயைப் போட்டு, ஒரு 15 நிமிடம் மிதமான சூட்டில் வதக்கவும்.

6. பின்னர் கத்தரிக்காயை எண்ணெயிலிருந்து வெளியே எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். அதே எண்ணெய்யில் காய்ந்த மிளகாய் போட்டு வறுக்கவும்.

7.இதில் கடுகு சேர்த்து பொரிந்தவுடன், பூண்டு சேர்த்து வதக்கவும். பூண்டு பொன்னிறமாக மாறியவுடன் அதில் சின்ன வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். கூடவே கறிவேப்பிலையையும் சேர்த்து வதக்கவும்.

8. நன்கு வதங்கிய பின், அதில் அரைத்து வைத்த தக்காளியை ஊற்ற வேண்டும். இதில் மஞ்சள் தூள், தனியா தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து சமைக்கவும்.

9.பின்னர், அரைத்து வைத்த மசாலாவை இதில் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இதில் கரைத்து வைத்த புளித் தண்ணீரைச் சேர்த்து, கூடுதலாக ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.

10. இதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து 7 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். அதன் பின் வதக்கி வைத்த கத்திரிக்காயை இதில் சேர்க்கவும். மேலும் இதில் பெருங்காயம் சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

11. நன்கு கொதித்த பின் தேவைப்பட்டால் 3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து இறக்கி விடவும். அருமையான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு ரெடி..
செட்டிநாடு எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு..
        எளிமையான முறையில் செட்டிநாடு எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு எப்படி வைப்பது என்று பார்க்கப்போகிறோம்.
தேவையான பொருட்கள்:
 கத்தரிக்காய் -08

 சின்ன வெங்காயம் -20

தக்காளி -02

திருகிய தேங்காய் -சிறிதளவு

சோம்பு -1தேக்கரண்டி

சீரகம் -1 தேக்கரண்டி

மிளகு -சிறிதளவு

பூண்டு -6

கடுகு தாலிபுக்கு -தேவையான அளவு

வெந்தயம் தாலிபுக்கு -தேவையான அளவு

புளி கரைசல் -1/2 கப்

நல்லெண்ணெய் -5 தேக்கரண்டி

உப்பு -தேவையான அளவு

மிளகாய் தூள் -தேவையான அளவு

மல்லித்தூள் -தேவையான அளவு

மஞ்சள்தூள் -சிறிதளவு

செய்முறை:

   முதலில் கடாயில் வதக்குவதற்கு தேவையான அளவு நல்லலெண்ணெய் ஊற்ற வேண்டும்.
எண்ணெய் சூடானதும் 1/2 ஸ்பூன் மிளகு, 1/2 ஸ்பூன் சீரகம், 10 நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். அதனோடு 5 பல் பூண்டு, 1 தக்காளி, சிறிதளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதனோடு 4 ஸ்பூன் திருகிய தேங்காய் சேர்த்து வதக்கவும்.
வதக்கிய பொருட்கள் எல்லாம் சிறிது நேரம் ஆறவிடுங்கள். பிறகு மிக்ஸியில் போட்டு பேஸ்ட்டாக அரைத்து கொள்ள வேண்டும்.
மற்றறொரு கடாயில் 5 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி 8 கத்தரிக்காயும் சேர்த்து வதக்கவும். கத்திரிக்காய் தோல் சுருங்கும் வரை நன்றாக வதக்கவும்.
வதக்கிய கத்திரிக்காயை தனியாக எடுத்து வைக்கவும்.

கடாயில் 5 ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்ற வேண்டும். அதில் 1/2 ஸ்பூன் கடுகு, 1/2 ஸ்பூன் சீரகம், 1/4 ஸ்பூன் வெந்தயம், மிளகு சிறிதளவு, ஒரு கையளவு கறிவேப்பிலை சேர்த்து லைட்டா வதக்க வேண்டும்.
அதன்பின் 10 சின்ன வெங்காயம், 5 பல் பூண்டு சேர்த்து கலர் மாறும்வரை வதக்க வேண்டும்.
வதக்கிய பிறகு 1 நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

அதற்கு பின் தேவையான அளவு உப்பு, 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள், காரத்துக்கேற்ற மிளகாய்த்தூள், 1 ஸ்பூன் மல்லித்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

பின் அதனோடு அரைத்து வைத்த பேஸ்ட்டையும் சேர்த்து வதக்க வேண்டும். வதக்கிய பிறகு கொஞ்சம் தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும்.
பின் கொதி வந்தவுடன் புளி கரைசலையும் சேர்த்து கொதிக்க விட வேண்டும்

அதற்கு பின் கொதித்த பிறகு வதக்கி வைத்த கத்திரிக்கையையும் சேர்த்து மூடி வைத்து 15 நிமிடம் கொதிக்க விடுங்கள் எண்ணெய் பிரிந்த நிலை வந்தவுடன் அடுப்பை அணைத்து விட வேண்டும்.
இப்போது ருசியான செட்டிநாடு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு தயார்...
கத்தரிகாயின் நன்மைகள்..

1. இதில் உள்ள நீர்ச்சத்து, சருமத்தை மென்மையாக்கும். கத்திரிக்காயில் வைட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து உள்ளது. 

2. கத்திரிக்காய் நரம்புகளுக்கு வலுவூட்டவும், சளி, இருமலைக் குறைக்கவும் செய்கிறது.  முதல்கட்ட சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் வல்லமை பெற்றது. வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல், உடல் பருமன் முதலியவற்றைக் குணப்படுத்தும் காய்கறிகளுள் கத்தரிக்காயும் ஒன்று.

3.போட்டோ நியூட்ரியெண்ட்ஸ் இருப்பதால் நினைவாற்றல் அதிகரிக்கும். இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் கொழுப்பைக் கரைக்கும். உடல் பருமனைக் குறைக்கும். மூளை செல்களைப் பாதுகாக்கும். கத்தரிக்காய் பிஞ்சாகச் சாப்பிடுவதே நல்லது. முற்றிய பெரிய காய்களைச் அதிக அளவு சாப்பிட்டால்தான் உடம்பில் அரிப்பு ஏற்படும்.

Benefits of eggplant..


 The water content in it softens the skin.  Eggplant contains vitamin C and iron.


 Eggplant strengthens the nerves and reduces phlegm and cough.  Has the ability to dissolve primary kidney stones.  Cuttlefish is one of the vegetables that cures rheumatism, asthma, liver diseases, gout, colds, bile, sore throat, constipation, hoarseness, obesity etc.


 The presence of photonutrients improves memory.  Antioxidants in it dissolve fat.  Reduces obesity.  Protects brain cells.  Eggplant is best eaten as a pinch.  If you eat too much of the ripe fruit, it will cause itchiness.

பிரபலமான இடுகைகள்